#RipBala trending on twitter Thalapthi Fan bala Died | கவனக்குறைவினால் ஏற்பட்ட சோகம்
கவனக்குறைவினால் ஏற்பட்ட சோகம்ட்விட்டர் இணையதளங்களில் மிக முக்கியமான பங்கை வகித்து வருகிறது.இன்றைய இளைஞர்கள் மத்தியில் அதன் பாயன்பாடு தற்சமயம் மிகவும் அதிகமாகி வருகிறது என்றே கூறலாம்.முன்பெல்லாம் பத்திரிக்கையில் செய்தி படித்து விமர்சனம் தெரிவித்து அதன் மூலம் தங்கள் கருத்துக்களை டீ கடைகளில் பேசி வந்த காலங்கள் மறைந்து இப்போது உடனுக்குடன் அப்டேட்டுகள் ட்விட்டரில் வலம் வருகின்றன.
சமீபத்தில் மீரா மிதுன் என்ற நடிகை ட்விட்டரில் பல்வேறு சர்ச்சையை கிளப்பும்படி விஜய் சூர்யா வை பற்றி பேசி பதிவிட்டு வருகிறார். சூர்யா விஜய் ரசிகர்கள் மீறமிதுன் கமென்டில் சென்று கிழித்து தொங்க விடுவதும் வாடிக்கியாகி வருகிறது.
இதற் கிடையில் தளபதி ரசிகர் பாலா என்பவர் வீட்டில் எதோ சில பிரச்சனைகள் வந்துள்ளது.அதனை அவர் மனம் உடைந்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.அவர் லைக் வருவதற்காகத்தான் அப்படி பதிவு செய்திருக்கிறார் என்று எல்லாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை.மேலும் மீரா மிதுன் மீது அனைவரின் கவனமும் இருந்ததால் தளபதி ரசிகர் பாலா பிரச்சனை அவர்களுக்கு புரியவில்லை.
ஆனால் அவர் தன்னுடைய ட்வீட் பதிவு செய்த பின்னர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.